Homeசெய்திகள்தமிழ்நாடுகர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர்...

கர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

-

- Advertisement -

ரூ.20,000 கடனுக்காக மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்த கொடூரம்; விறகு வியாபாரிக்குக் கடும் கண்டனம். காஞ்சிபுரம் அருகே கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது பச்சிளம் குழந்தையையும் பலிவாங்கிய கொடூர சம்பவத்திற்குக் காரணமான நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்து உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.கர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

அதிர்ச்சியளிக்கும் சோகம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள சிங்காடிவாக்கம் பழங்குடியினர் (இருளர்) காலனியைச் சேர்ந்த தேன்மொழி என்ற 9 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தார்ப்பாய் கொட்டகையில் வசித்து வந்த அப்பெண்ணை அவரது கணவர் ஆனந்தன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.

we-r-hiring

அப்போது, அவர்கள் விறகு வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம் பெற்றிருந்த ரூ.20,000 முன்பணக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது என அவர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்:
இச்சம்பவம் குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை, கடனைச் காரணம் காட்டி மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய செயல் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடனுக்காக ஒரு மனித உயிரையும், சிசுவின் உயிரையும் பொருட்படுத்தாமல் நடந்துகொண்ட இந்தக் கொடூரமான செயலைத் தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபருக்குச் சட்டப்படி உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், உயிரிழந்த தேன்மொழியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தையும் இழப்பீட்டையும் விறகு வியாபாரி ஆறுமுகம் வழங்க வேண்டும்.”

உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்தினருக்குத் தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2028 கும்பகோணம் மகாமகத் திருவிழா: ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் – 90 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

MUST READ