Homeசெய்திகள்தமிழ்நாடுவிநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: விண்ணைத் முட்டும் ஆம்னி பேருந்து கட்டணம்! பயணிகள் பெரும் அதிர்ச்சி!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: விண்ணைத் முட்டும் ஆம்னி பேருந்து கட்டணம்! பயணிகள் பெரும் அதிர்ச்சி!

-

- Advertisement -

வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

விண்ணைத் தொடும் கட்டணங்கள்: வழக்கமாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்கப்படும் டிக்கெட்டுகளின் விலை, தற்போது 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

  • சென்னையிலிருந்து மதுரை: ரூ. 4,000 வரை

  • சென்னையிலிருந்து திருநெல்வேலி: ரூ. 3,500 வரை

  • சென்னையிலிருந்து கன்னியாகுமரி: ரூ. 3,800 வரை

  • சென்னையிலிருந்து நாகர்கோவில்: ரூ. 3,690 வரை

  • சென்னையிலிருந்து கோவை: ரூ. 3,000 வரை

  • சென்னையிலிருந்து ஈரோடு: ரூ. 2,500 வரை

இதேபோல், பெங்களூரில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.650 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பயணிகள் வேதனை & கோரிக்கை: ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்கூட்டியே விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், சொந்த ஊர்களுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறு வழியின்றி இந்த அநியாயக் கட்டணத்தைக் கொடுத்துப் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக, “அரசுக்கு எந்தவொரு லஞ்சமும் வழங்க தேவையில்லாத சூழல் நிலவுவதால், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிப்போம்” என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், நடைமுறையில் அது வெறும் காகித அளவிலேயே உள்ளதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இத்தகைய கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரந்தூர் அருகே 442 ஏக்கரில் புதிய சிப்காட்: ரூ.175 கோடியில் மின்னணுப் பொருட்கள் உற்பத்திப் பூங்கா அமைக்க அரசாணை வெளியீடு!

MUST READ