வரும் விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு விமானக் கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலக் தேவையைப் பயன்படுத்தித் தனியார் விமான நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளதாகப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


₹10,000 முதல் ₹15,000 வரை உயர்வு
சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் பிற முக்கிய நகரங்களுக்கும் செல்ல வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, தற்போது கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநில பெருநகரங்களுக்கும் செல்லும் விமானங்களின் கட்டணம் வழக்கத்தை விட ₹10,000 முதல் ₹15,000 வரை உயர்ந்துள்ளது.
பயணிகள் கடும் அவதி
விடுமுறையைக் கழிப்பதற்காகக் குடும்பத்துடன் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்ய முயன்ற நடுத்தர மற்றும் விஐபி பயணிகள் பலர் இக்கட்டண உயர்வாலே அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயில்களில் வாரங்கள் கடந்து பயணச்சீட்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், அவசரப் பயணத்திற்காக விமானங்களை நாடுவோரை இந்தத் திடீர் கட்டண உயர்வு பெரிதும் பாதித்துள்ளது.
அரசு தலையிடக் கோரிக்கை
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் தனியார் விமானங்கள் தன்னிச்சையாகக் கட்டணங்களை உயர்த்துவதைக் கட்டுப்படுத்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், மாநில அரசும் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழங்குடியினத் தாயும் சேயும் பலி: சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
