அதிமுக குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என்றும், அவர் எல்லை மீறி பேசி வருகிறார் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுவதற்கு ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்றும், அதிமுகவின் உண்மைத் தொண்டர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் கருத்து தெரிவித்து வருவதாக கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

மேலும், அமைச்சர் பதவியில் இருப்பவர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடக் கூடாது என்றும் கே.பி.முனுசாமி கூறினார். அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்து பேச வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். அதிமுக குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பதை ஆதவ் அர்ஜுனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தும் நிலை ஏற்படும் என்றும் கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் – மு.வீரபாண்டியன் விளக்கம்
