Homeசெய்திகள்அரசியல்அருந்ததிய இன மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக தான் - செ.கு.தமிழரசன் புகழாரம்

அருந்ததிய இன மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக தான் – செ.கு.தமிழரசன் புகழாரம்

-

- Advertisement -

அருந்ததிய இன மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான் செ.கு.தமிழரசன் கூறியுள்ளாா்.அருந்ததிய இன மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக தான் - செ.கு.தமிழரசன் புகழாரம்நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அரசியல் கட்சிகள் மட்டும் இன்றி பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் மிகுந்த உரிமையையும் பாதுகாப்பையும் திமுக அரசு வழங்கி வருவதாக அவர் பாராட்டினார். மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளித்திருக்கக்கூடிய அந்த வாய்ப்பு என்பது சான்றாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். அப்படிப்பட்ட இந்தக் கூட்டணியை ஆதரிப்பது என்பது அம்பேத்கர்ஷிகளுடைய தலையாய கடமை, லட்சியம் என்றார். திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற அம்பேத்கரிஷ்டுகளை அம்பேத்கர் இயக்கங்களை ஒருங்கிணைக்க நாங்கள் பாடுபடுவோம் எனக் கூறினார்.

we-r-hiring

அருந்ததிய இயக்கங்களுக்கு திமுக இந்த முறை தொகுதி ஒதுக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் , அருந்ததிய உட்பிரிவுக்கு கடந்த காலத்திலேயே பல விமர்சனங்கள் வந்தபோது அவர்களை ஆதரித்து சட்டம் வாங்கியது திமுக அரசு தான் என்றார். மேலும் அருந்ததிய இயக்கங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும் திமுகவில் உள்ள அருந்ததிய நிர்வாகிகளுக்கு பல பொறுப்புக்களை வழங்கி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். உண்மையிலேயே அருந்ததிய மக்களின் நலனுக்காக வளர்ச்சிக்காக பாடுபடுவதும் துணை நிற்பதும் திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக் கூறினார்.

https://www.apcnewstamil.com/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2026/complaints-are-piling-up-against-thaweka-candidates-what-happened-to-vijays-pure-power-dialog

MUST READ