spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்”ஆளுநரே திரும்பிப் போ”-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

”ஆளுநரே திரும்பிப் போ”-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

-

- Advertisement -

மார்க்சியம் குறித்த ஆளுநரின் பேச்சு. சிதம்பரத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 25 பேர் கைது.

மார்க்சியம் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து இருந்தது.

we-r-hiring

நாட்டியாஞ்சலி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று(22.02.2023) சிதம்பரம் வந்தார். இன்றும்(23.02.2023) அவர் சிதம்பரத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார் வரும் வழியில் கடலூரில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் அறிவித்திருந்தார்.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிகளை ஏந்தியும், கருப்புக் கொடி ஏந்தியும் கடலூர் அண்ணா பாலம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

”ஆளுநரே திரும்பிப் போ” என்கிற வாசகங்களையும், ஆளுநருக்கு எதிரான முழக்கங்களையும் முன் வைத்து ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். இதையடுத்து அவர்கள் நடுரோட்டில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 25க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

MUST READ