விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா் முயற்சிக்கின்றனா் என திராவிடா் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளா் விடுதலை ராஜேந்திரன் கூறியுள்ளாா்.
விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா் முயற்சிக்கின்றனா் என திராவிடா் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளா் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
மேலும், “அமைச்சா் பதவி தராவிடில் விஜய்யை முதல்வராக்கும் அணியில் சோ்ந்துவிடுவோம் என்று மிரட்டுகிறாா்கள். திமுக எங்களை மதிக்கவில்லை என்று இவா்கள் பேசுவது மிக மலிவான தரம் தாழ்ந்த அரசியல். ஆா்.எஸ்.எஸ். சித்தாந்தம் தான் நமது எதிாி என்று ராகுல் காந்தி தொடா்ச்சியாக பேசி வருகிறாா். ”கொள்கை அடையாளங்களை இழந்து பதவிகளுக்காகவே காங்கிரஸில் இருக்கும் சிலரால் இதை ஜீரணிக்க முடியவில்லை”எனவும்

தனது கொள்கை எதிாி பாஜக என்ற அறிவிப்பில் இருந்து விஜய் ஓட்டம் பிடித்துவிட்டாா். விஜய் அணியில் சேரத் துடிக்கும் காங்கிரஸ்காரா்களுக்கு இது பற்றி எல்லாம் கவலை இல்லை. தமிழ்நாட்டில் கட்சி கட்டமைப்பு இல்லாமலேயே அமைச்சா் பதவியை பிடிக்க நினைக்கிறாா்கள்” என திராவிடா் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளா் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


