2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
தஞ்சையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, ”2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி ஏற்படும் என்று கூறினார். மேலும், எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது எனறும், வெற்றி பெறும் கூட்டணியில் இடம் பெறுவோம் என்று தெரிவித்துள்ளாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைய வேண்டும் என்பது நயினார் நாகேந்திரனின் விருப்பம் மட்டுமே, அதுகுறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்ல என டி.டி.வி.தினகரன் விளக்கமளித்துள்ளா். கூட்டணி குறித்து டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிவெடுக்க நினைத்ததாகவும், ஆனால் தற்போது முடிவு செய்ய பிப்ரவரி வரை அவகாம் உள்ளதா கூறினாா்”. அண்மையில், டி.டி.வி.தினகரனை சந்தித்து அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது கவனிக்கத்தக்கது.
டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனை! அமித்ஷாவின் திருப்பரங்குன்றம் திட்டம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!


