- Advertisement -
த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிகழகத்தின் சார்பாக விஜய் தனித்து போட்டியிடுகிறார். அதற்கான முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவா் விஜய் வெளியிட்டுள்ளாா். “சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக கொடுக்கிறது” அதில்,
- 60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள்
- மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை
- தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள் ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் உத்தரவாதம்
- போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு
- குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம் வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ரூ.4,000
- டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2500
- 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
- 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி
- கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….
