Homeசெய்திகள்அரசியல்தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்: அதிரடி காட்டும் முதல் மூன்று கையெழுத்துக்கள்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்: அதிரடி காட்டும் முதல் மூன்று கையெழுத்துக்கள்!

-

- Advertisement -

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
பதவியேற்ற கையோடு தலைமைச் செயலகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், பொதுமக்களின் நலன் மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மூன்று மிக முக்கியமான கோப்புகளில் தனது முதல் கையெழுத்துக்களை இட்டுள்ளார்.

1. 200 யூனிட் இலவச மின்சாரம்

we-r-hiring

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் முதலமைச்சர் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார். இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் பெரும் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

பெண்களின் பாதுகாப்பிற்குத் தனது ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்த விஜய், பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ என்ற பெயரில் புதிய சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான உத்தரவில் இரண்டாவது கையெழுத்திட்டுள்ளார். பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்கவும் இந்தப் படை செயல்படும்.

3. போதைப்பொருள் தடுப்புப் படை (மாவட்ட வாரியாக)

தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, மாவட்ட வாரியாகப் போதைப்பொருள் தடுப்புப் படையை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது அவரது மூன்றாவது முக்கிய கையெழுத்தாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கெனத் தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் நாளிலேயே விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ