spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஅடில் ரஷீத்தின் சுழலில் சுருண்டது ஓமன் அணி! - இங்கிலாந்து அணி மெகா வெற்றி!

அடில் ரஷீத்தின் சுழலில் சுருண்டது ஓமன் அணி! – இங்கிலாந்து அணி மெகா வெற்றி!

-

- Advertisement -

ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 3.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழந்து 51 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

we-r-hiring

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றிரவு (இந்திய நேரப்படி) நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் தலைமையிலும் ஓமன் அணியானது அஹிப் இல்யாஸ் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ்சில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஓமன் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரடிக் அதவலே 5 ரன்களிலும் காஷ்யாப் பிரஜபடி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அஹிப் இல்யாஸ் 8 ரன்களிலும் சீசான் மக்சூத் 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 13.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 47 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய 18 பில் சால்ட் 12 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் எதிர்த்து ஆடிய ஜாஸ் பட்லர் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழக்க ஜானி பேர்ஸ்டோ 8 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 50 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தயாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஆட்டநாயகனாக அடில் ரஷித் தேர்வு செய்யப்பட்டார்.

 

MUST READ