Homeசெய்திகள்விளையாட்டுசெஸ் போட்டியில் நூதன சர்ச்சை: கார்ல்சனைத் தொடர்ந்து அபிமன்யு மிஸ்ரா, ரிச்சர்ட் ராப்போரும் ஆட்டத்தைப் புறக்கணித்தனர்!

செஸ் போட்டியில் நூதன சர்ச்சை: கார்ல்சனைத் தொடர்ந்து அபிமன்யு மிஸ்ரா, ரிச்சர்ட் ராப்போரும் ஆட்டத்தைப் புறக்கணித்தனர்!

-

- Advertisement -

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனைப் பின்பற்றி, இந்திய வீராங்கனை ஆர். வைஷாலியின் எதிராளியான அபிமன்யு மிஸ்ரா மற்றும் ரிச்சர்ட் ராப்போரும் தங்களது  ஃபாஸ்ட் கிளாசிக்  ஆட்டங்களில் விளையாடாமல் தோல்வியை ஏற்றுக்கொண்டனர்.

இதனால், டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட் தொடரில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து 2 நாட்களாக ஆட்டத்தைப் புறக்கணித்த கார்ல்சன்:

கஜகஸ்தான் கிராண்ட்மாஸ்டர் பிபிசாரா அசாவுபாயேவாவுக்கு எதிரான இரண்டு நாள் போட்டியின் முதல் கட்டத்தில், கார்ல்சன் வெல்ல முடியாத முன்னிலையைப் பெற்றார். இதையடுத்து, அன்றைய ஃபாஸ்ட் கிளாசிக் ஆட்டத்தில் பங்கேற்காமல் தோல்வியை ஏற்றுக்கொண்டார்.

கார்ல்சனைப் பின்பற்றிய அபிமன்யு மிஸ்ரா:

அடுத்த நாளும் அதேபோன்ற சம்பவம் தொடர்ந்தது. மீண்டும் வெல்ல முடியாத முன்னிலையைப் பெற்ற கார்ல்சன், தனது ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

அவரைப் பின்பற்றி, இந்திய வீராங்கனை ஆர். வைஷாலிக்கு எதிராக விளையாட வேண்டிய அபிமன்யு மிஸ்ராவும், ரிச்சர்ட் ராப்போரும் தங்களது ஃபாஸ்ட் கிளாசிக் ஆட்டங்களில் பங்கேற்காமல் தோல்வியை ஏற்றுக்கொண்டனர்.

இதனால், வைஷாலியும் ஆர்மீனிய கிராண்ட்மாஸ்டர் ஹைக் மார்டிரோஸ்யனும் விளையாட்டு அரங்கில் தங்களது எதிராளிகளுக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து இரண்டு நாள்களாக கார்ல்சன் ஆட்டத்தில் பங்கேற்காத நிலையில், அவரைப் பின்பற்றி மற்ற வீரர்களும் அதே முடிவை எடுத்திருப்பது இந்தச் செஸ் தொடரில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய செஸ் வரலாற்றில் புதிய சரித்திரம்! 100-வது கிராண்ட்மாஸ்டரானார் அனுஜ் ஸ்ரீவத்ரி!

 

 

 

MUST READ