Homeசெய்திகள்விளையாட்டுசாஃப் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி சாஃப் கோப்பையை வென்றது இந்தியா!

சாஃப் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி சாஃப் கோப்பையை வென்றது இந்தியா!

-

- Advertisement -

சாஃப் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டி சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சுனில் சேத்ரி, “எனக்குள் இருக்கும் ரசிகனுக்கு இந்த வெற்றி தேவைப்பட்டது. மூசா சகோதரருக்கும், ஒட்டுமொத்த அணிக்கும் வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் செய்த சாதனையை நினைத்துப் பெருமைப்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் நவுஷாத் மூசா மற்றும் வீரர்களின் கூட்டு முயற்சியை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராகத் த்ரில் வெற்றி:

வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது.

முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் அலம்கிர் காசி கோல் அடித்து பாகிஸ்தான் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதி முடிவில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியது.

இரண்டாவது பாதியில் இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியது. 59-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் ஷா, இந்திய வீரர் பிரிசன் பெர்னாண்டஸ் மீது மேற்கொண்ட விதிமீறலுக்காக VAR ஆய்வுக்குப் பிறகு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குப் பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது.

60-வது நிமிடத்தில் சமன்; 88-வது நிமிடத்தில் வெற்றி கோல்!

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி, 60-வது நிமிடத்தில் சுஹைல் அகமது பட் அடித்த கோல் மூலம் ஆட்டத்தைச் சமன் செய்தது.

தொடர்ந்து இரு அணிகளும் வெற்றி கோலுக்காகப் போராடின. ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88-வது நிமிடத்தில் சண்டீப் மண்டி தலையால் முட்டி கோல் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாஃப் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றியது.

தொடர்ந்து மூன்றாவது முறை சாம்பியன்:

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சாஃப் சாம்பியன்ஷிப் தொடரில் 10-வது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது. மேலும், தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணியாகவும் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சாஃப் சாம்பியன்ஷிப்பிலும் இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது. அப்போது சிறப்பாக விளையாடிய சுனில் சேத்ரி, கோல்டன் பால் மற்றும் கோல்டன் பூட் விருதுகளைப் பெற்றிருந்தார்.

தற்போது சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சேத்ரி, இந்திய அணியின் இந்த வெற்றியை ஒரு ரசிகராகக் கொண்டாடியிருப்பது கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் 43 போட்டிகள் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இங்கிலாந்து – பெல்ஜியத்திடம் படுதோல்வி அடைந்த இத்தாலி!

 

 

MUST READ