சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற எலைட் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஜம்மு காஷ்மீர் 201 ரன்கள் குவிப்பு
தொடக்க வீரர் கம்ரான் இக்பால் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். கேப்டன் ஷுபம் கஜுரியா 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அப்துல் சமத் 29 ரன்கள் சேர்த்தார்.
இதனால் ஜம்மு காஷ்மீர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.
அமித் சத்விக்கின் அதிரடி வீண்
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு அமித் சத்விக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 31 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.
நாராயண் ஜெகதீசன் 35 ரன்களும், பாலசுப்பிரமணியம் சச்சின் 29 ரன்களும், ஆர். ராஜ்குமார் 24 ரன்களும் எடுத்தனர்.
இருப்பினும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய தமிழ்நாடு அணி வெற்றியை நெருங்கியும் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது.
உலக சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி! 15 வயதில் டி20 கிரிக்கெட்டின் இளம் கேப்டன் என்ற பெருமை!
