Homeசெய்திகள்விளையாட்டுடைட்டன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய 'தாதா': குஜராத்தின் பேட்டிங் பலத்தை அதிரடியாக்கும் மேத்யூ ஹைடன்!

டைட்டன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ‘தாதா’: குஜராத்தின் பேட்டிங் பலத்தை அதிரடியாக்கும் மேத்யூ ஹைடன்!

-

- Advertisement -

Gujarat Titans Sign Hayden as Batting Coach

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆற்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

டி20 உலகக்கோப்பையில் 3வது முறையாக இந்தியா கோப்பை வென்று, கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து அடுத்த கொண்டாட்டமாக ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL)2026 தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு முக்கிய அதிரடி மாற்றத்தை செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவுக்காக 273 சர்வதேச போட்டிகளில் விளையாடி 15,000-க்கும் அதிகமான ரன்களை குவித்தவர்.

கடந்த சீசனில்(ஐபிஎல் – 2025) உதவி பயிற்சியாளராக இருந்த மேத்யூ வேட்-க்கு பதிலாக ஹைடன் இந்த பொறுப்பை ஏற்கிறார். தலைமை பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் இணைந்து ஹைடன் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “புதிய பேட்டிங் பயிற்சியாளராக ஹைடன் நியமிக்கப்பட்டது எங்களது பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். சர்வதேச அளவில் உயர்மட்ட அனுபவம் கொண்ட அவர், எங்களது அணியின் இளம் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார். அவரது வருகை எங்களது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தும்” என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி தெரிவித்துள்ளார்.

அதேபோல், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஹைடன், “நல்ல பேட்டிங் என்பது எதிரணிக்கு அழுத்தம் கொடுப்பது; ஆனால் சிறந்த பேட்டிங் என்பது ஆட்டத்தையே தன்வசப்படுத்துவது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் அந்தத் தரத்தையே நாங்கள் உருவாக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.”

 

MUST READ