Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

-

- Advertisement -

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு வரும் அஜித் அதர்கரின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த தேர்வுக்குழு தலைவராகப் முன்னாள் நட்சத்திர வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மணை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

we-r-hiring

அணியின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் சீரான அணித் தேர்வை உறுதி செய்யும் நோக்கில் இந்த மாற்றத்தை மேற்கொள்ள பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. செப்டம்பருடன் முடியும் அதர்கரின் பதவிக்காலம் முடிவடையும் ஒப்பந்தம் தற்போதைய சீனியர் தேர்வுக்குழுத் தலைவரான அஜித் அதர்கரின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.

அதிரடி முடிவுகள்
இவரது தலைமையிலான தேர்வுக்குழுவின் கீழ் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியதுடன், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது.

புதிய பொறுப்பில் வி.வி.எஸ்.லக்ஷ்மண் விருப்பமும் அனுபவமும்- தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA – Centre of Excellence) தலைவராகச் செயல்பட்டு வரும் வி.வி.எஸ். லக்ஷ்மண், இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை மிக அருகில் இருந்து கவனித்து வருகிறார். முக்கியப் பொறுப்பு இளம் வீரர்களின் திறமைகளை அடையாளம் காண்பதில் சிறந்து விளங்கும் லக்ஷ்மணைச் மூத்தத் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிப்பதே சரியாக இருக்கும் என பிசிசிஐ நிர்வாகிகள் கருதுவதாகத் தெரிகிறது.

முக்கியத் தொடர்கள் வரவுள்ள நிலையில் மாற்றம் அடுத்தடுத்த ஐசிசி (ICC) தொடர்கள், மூத்த வீரர்களின் பணிச்சுமை மேலாண்மை மற்றும் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வருவது போன்ற சவால்கள் நிறைந்துள்ள நிலையில், பிசிசிஐ மேற்கொள்ள உள்ள இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

 

 

MUST READ