Homeசெய்திகள்விளையாட்டுகிராண்ட் செஸ் டூர்: வின்சென்ட் கீமரை வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை நெருங்கிய பிரக்ஞானந்தா!

கிராண்ட் செஸ் டூர்: வின்சென்ட் கீமரை வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை நெருங்கிய பிரக்ஞானந்தா!

-

- Advertisement -

கிராண்ட் செஸ் டூர் போட்டியின் அரை இறுதிச் சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது.

we-r-hiring

இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்தார். இந்நிலையில் வின்சென்ட் கீமருடன் நேற்று முன்அரங்கில் மீண்டும் மோதினார் பிரக்ஞானந்தா. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 55-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார்.

இதன் மூலம் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் உள்ளார். இதன் வாயிலாகக் கிராண்ட் செஸ் டூரின் நிறைவு போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அவர் மிகவும் நெருங்கியுள்ளார்.

கிளாசிக்கல் போட்டியைத் தொடர்ந்து பிரக்ஞானந்தாவும், வின்சென்ட் கீமரும் 2 ரேபிட் மற்றும் 4 பிளிட்ஸ் போட்டிகளிலும் அடுத்து மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு டெஸ்டில் மோதல்: ஜெய்ஸ்வால், ஃபொ்னாண்டோவுக்கு ஐசிசி அபராதம் மற்றும் தகுதி இழப்புப் புள்ளி (Demerit Point)

MUST READ