இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மைதானத்தில் ஏற்பட்ட தேவையற்ற வாக்குவாதம் மற்றும் மோதல் காரணமாக இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா ஃபொ்னாண்டோ ஆகிய இருவருக்கும் போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடவடிக்கை எடுத்துள்ளது.
மோதலின் பின்னணி இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் 17-வது ஓவரில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை அசிதா ஃபொ்னாண்டோ வீழ்த்தினார். அதன் பின் ஃபொ்னாண்டோ உணர்ச்சிவசப்பட்டு வழியனுப்பும் வகையில் பேசியதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே காரசாரமான வார்த்தை மோதல் ஏற்பட்டது. இரு வீரர்களும் மிக அருகில் சென்று தலையோடு தலை முட்டிக்கொள்ளும் அளவுக்கு மோதிக்கொண்டதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

சக வீரர்களும் கள நடுவர்களும் தலையிட்டு இருவரையும் விலக்கி விட்டனர். ஐசிசியின் ஒழுங்கு நடவடிக்கைமைதானத்தில் தகாத உடல்தொடர்பு மற்றும் தவறான முறையில் நடந்துகொள்வதைக் தடுக்கும் ICC நடத்தை விதிகளின் (Code of Conduct) பிரிவு 2.12-ன் கீழ் இது ‘Level 1’ குற்றமாகக் கருதப்படுகிறது:
அபராதம்: இரு வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிமெரிட் புள்ளி: அபராதத்துடன் சேர்த்து இருவரது ஒழுங்கு நடவடிக்கை பதிவிலும் தலா 1 டிமெரிட் புள்ளி (Demerit point) சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணையின்றி ஒப்புக் கொள்ளுதல்: மேட்ச் ரெஃபரி ஆண்டி பைகிராப்ட் (Andy Pycroft) அளித்த தண்டனையை இரு வீரர்களும் ஏற்றுக்கொண்டதால், தனியாக விசாரணை எதுவும் நடத்தப்படாமல் வழக்கு முடிக்கப்பட்டது
தோனியின் சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்! புதிய மைல்கல்லை எட்டிய இந்திய நட்சத்திரம்!
