spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலாஷேத்ரா விவகாரம்: நடிகை அபிராமிக்கு பாடகி சின்மயி கொடுத்த பதிலடி

கலாஷேத்ரா விவகாரம்: நடிகை அபிராமிக்கு பாடகி சின்மயி கொடுத்த பதிலடி

-

- Advertisement -

அ

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்திரா கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதை அடுத்து அந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் .

we-r-hiring

கலாஷேத்திரா சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள், பாலியல் தொல்லைகள் கொடுக்கிறார்கள் என்று கல்லூரி மாணவிகள் புகார் அளித்திருக்கிறார்கள். கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இந்த புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவிகள் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ச்

இதை அடுத்துதான் போராட்டம் , விசாரணை தீவிரமாகி அந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் . ஆனால் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவியும் நடிகையும் பிக்பாக்ஸ் புகழ் அபிராமி, கலாஷேதிரா என்கிற பெயரை கூட ஒழுங்காக சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரி பற்றி குறை சொல்வது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. 10 வருடமாக இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறார்கள் . அப்படி எல்லாம் இல்லை. நானும் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி தான்.

ஒரு பக்கம் இருக்கும் தரப்பை வைத்து மட்டும் பேசக்கூடாது. எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அந்த விஷயம் நடக்கும் போது அதை பற்றி ஓப்பனாக பேச வேண்டும் . வளர்ந்து விட்டு ஏறி உட்கார்ந்த பின்னர் ஓடுவது வேஸ்ட் என்று கூறியிருந்தார்.

இதற்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்திருக்கிறார். உண்மையை அப்போதே சொன்னாலும் தாமதமாக சொன்னாலும் அது உண்மைதான். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மைதான் . உண்மை பொய்யாகி விடாது என்று கூறியிருக்கிறார்.

MUST READ