ஆடி மாதம் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..
பொதுவாகவே வார விடுமுறை நாட்களில் இறைச்சி மற்றும் மீன்கடைகளில் வியாபாரம் களைகட்டும். வாரம் முழுவதும் படிப்பு, வேலை என இருப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவதே ஒரு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும் மீன் வகை உணவுகளில் ஆர்வம் காட்டுபவர்களும் அதிகம். அந்தவகையில் சென்னைவாசிகள் பெரும்பாலும் காசிமேடு மீன் சந்தைக்குச் சென்று மீன்களை வாங்குவது வழக்கம்.. இந்த நிலையில் டிது ஆடி மாதம் என்பதால் அம்மனுக்கு கூழ் வார்ப்பதற்காக பலர் மீன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆடி மாத இரண்டாவது வாரம் என்பதாலும், அடுத்தடுத்து ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை என விரத நாட்கள் வருவதாலும் இந்த வாரம் காசிமேடு சந்தை கூடுதல் மக்கள் வெள்ளத்தில் களைகட்டுகிறது. காசிமேடு சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி அரும்பாக்கம், அண்ணா நகர், பட்டினப்பாக்கம், அசோக் நகர் என வெளிப்பகுதியில் இருந்தும் ஏராளமானோர் மீன்வாங்க குவிந்துள்ளனர். இதனிடையே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பியதால் மீன்களின் வரத்து அதிகமாகி இந்த வாரம் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது.
மீன்கள் கடந்த வாரம் இந்த வாரம்
முழு வஞ்சிரம் ரூ. 1100 ரூ. 900
ஸ்லைஸ் வஞ்சிரம் ரூ. 1500 ரூ. 1300
சங்கரா ரூ. 400 ரூ. 350
இறால் ரூ. 450 ரூ. 450
சீலா ரூ. 450 ரூ. 450
கருப்பு வவ்வால் ரூ. 800 ரூ. 1000
வெள்ளை வவ்வால் ரூ.1400 ரூ. 1200
கொடுவா ரூ. 600 ரூ. 550
டைகர் இறா ரூ. 900 ரூ. 1100
நண்டு ரூ. 400
சங்கரா மீன் ரூ. 400
கடல் விரால் ரூ. 500
களவான் மீன் ரூ.500 ரூ. 450
நெத்திலி ரூ. 200 ரூ. 350
கடம்பா மீன் ரூ.350 ரூ. 300
சுறா ரூ. 450 ரூ. 500
என கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.100 முதல் ரூ.50 வரை விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன.