Homeசெய்திகள்தமிழ்நாடுஅமர்நாத்தில் 21 தமிழ்நாடு பக்தர்கள் சிக்கி தவிப்பு

அமர்நாத்தில் 21 தமிழ்நாடு பக்தர்கள் சிக்கி தவிப்பு

-

அமர்நாத்தில் 21 தமிழ்நாடு பக்தர்கள் சிக்கி தவிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த 21 பேர் பனி மலையில் சிக்கியுள்ளனர்.

அமர்நாத்

சென்னை தாம்பரத்தை சேர்ந்த சங்கர் தலைமையில் தமிழகத்திலிருந்து 21 பேர் கடந்த 4 ஆம் தேதி, அமர்நாத் புனித யாத்திரைக்கு புறப்பட்டனர். காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றடைந்த யாத்திரை குழுவினர், பின்னர் அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அமர்நாத் கோயிலுக்கு மலைச்சாலையில் நடந்து சென்று பனிலிங்கத்தை தரிசித்தனர். மறுநாள் மீண்டும் பால்டால் பகுதிக்கு வந்தடைந்தனர். அப்போது ஸ்ரீநகருக்கும், காஷ்மீருக்கும் இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பாதை முடிவிட்டது.

அமர்நாத்

இதனால் சி.ஆர்.பி.எப் வீரர்கள், மணி காம்ப் என்ற இடத்தில் உள்ள முகாமில் நான்கு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் சிக்கி தவிக்கின்றனர். கடந்த 4 நாட்களாக போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் சிக்கி பரிதவித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள தங்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜம்மு- ஸ்ரீநகர் இடையே ராம்பன் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

முன்னதாக ஜம்மு காஷ்மீரில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நடக்கவிருந்த அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

MUST READ