தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 300 மூடை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெ ல்லையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்திலிருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. தமிழக கேரளபகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையில் உள்ளது . ரயில், பஸ், காய்கறி லாரிகள், சரக்கு லாரிகள் என பல வாகனஙகளில் பொருட்களுக்கு கீழ் வைத்து பல டன் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. பலத்த கண்காணிப்பையும் மீறி இந்த கடத்தல் தொடர்ந்து நடந்து வருவதாக சமூக அலுவலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்
இன்று காலை புளியரை சோதனை சாவடி இன்று அதிகாலை புளியரை சோதனை சாவடியை கடந்து சென்ற ஒரு லாரியை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது லாரியை ஓட்டிவந்தவர் அதில் கால்நடை தீவனம் இருப்பதாக கூறியுள்ளனர். ஆனாலும் சந்தேகமடைந்த போலீசார் சோதித்த போது உள்ளே மூடை மூடையாக ரேசன் அரிசி இருந்துள்ளது தெரியவந்தது. சுமார் 300 மூடைகளில் இருந்த அரிசியின் எடை சுமார் 20 டன் இருக்கலாம் கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் அந்த லாரியை கைப்பற்றியதுடன் லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலி அருகே உள்ள சங்கர் நகர் பகுதிய சேர்ந்த பொன்ராஜ் ,சேது ராமலிஙகம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் மற்றும் பிடிபட்டவர்களும் உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.