Homeசெய்திகள்வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

-

- Advertisement -

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று அதே பகுதிகளில் நிலவுவதாகவும், இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரையை நோக்கி  நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது.

இதன் காரணமாக  தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4  மாவட்டங்களில் வருகின்ற 15-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ