Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் நிர்வாகத்தில் அடுத்தடுத்த அதிரடிகள்: 'எம்.ஆர்.பி' விலைக்கே மது விற்பனை! ஆனால் காத்திருக்கும் பெரும் போராட்டம்!

டாஸ்மாக் நிர்வாகத்தில் அடுத்தடுத்த அதிரடிகள்: ‘எம்.ஆர்.பி’ விலைக்கே மது விற்பனை! ஆனால் காத்திருக்கும் பெரும் போராட்டம்!

-

- Advertisement -

ஒரு பக்கம் “கூடுதல் கட்டணம் ரத்து”.. மறுபக்கம் “கடையடைப்பு எச்சரிக்கை”: இரண்டாகப் பிளவுபட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள்!டாஸ்மாக் நிர்வாகத்தில் அடுத்தடுத்த அதிரடிகள்: 'எம்.ஆர்.பி' விலைக்கே மது விற்பனை! ஆனால் காத்திருக்கும் பெரும் போராட்டம்!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை, பாட்டில்களுக்கான கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு விவாதங்கள் மேலெழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் இரு வேறு முரண்பாடான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

“இனி MRP விலைக்கே மதுபானம்!” — ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கப் பிரதிநிதிகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது,  “டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை இறக்கும் கூலி, உடைந்த பாட்டில்களுக்கான இழப்பு மற்றும் கடை பராமரிப்புச் செலவினங்களை ஈடுகட்டவே இதுவரை பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 பெறப்பட்டு வந்தது.

தற்போது இந்த கூடுதல் செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. எனவே, இனி கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையிலேயே (MRP) மதுபானங்கள் விற்கப்படும். பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.”

“டாஸ்மாக்கை தனியாருக்குத் தாரைவார்க்க சதி!” — வேலைநிறுத்தப் போராட்ட எச்சரிக்கை!
அதேவேளையில், இடதுசாரி ஆதரவு பெற்ற டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்ட முன்வைத்துப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அச்சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தைச் சிறுகச் சிறுகத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் 24,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனியார்மயமாக்கல் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி, வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஒட்டுமொத்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் அடுத்தடுத்த அதிரடிகள்: 'எம்.ஆர்.பி' விலைக்கே மது விற்பனை! ஆனால் காத்திருக்கும் பெரும் போராட்டம்!

எளிய மக்களைப் பாதிக்கும் ‘ரெஸ்டோ பார்’ கலாச்சாரம்?
இதனிடையே, வழக்கமான டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, ‘ரெஸ்டோ பார்’ (Resto-Bar) கலாச்சாரத்தைப் பரவலாக்க அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் சாதாரண பார்களை மூடிவிட்டு, விலை உயர்ந்த ‘ரெஸ்டோ பார்’ முறையைக் கொண்டுவருவது எளிய மக்களைப் பாதிக்கும் என்றும், இது மறைமுகமாகத் தனியார் முதலாளிகளுக்கு வழிவகுக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சீர்திருத்தக் குழுவின் பரிந்துரை
மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான பொருளாதாரச் சீர்திருத்தக் குழுவின் மூலம் டாஸ்மாக் வருவாயைச் சீரமைக்கவும், நிர்வாக ரீதியிலான மாற்றங்களைக் கொண்டுவரவும் அரசு பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது. ஒருபுறம் ‘கூடுதல் கட்டணம் ரத்து’ என்ற அறிவிப்பும், மறுபுறம் ‘வேலைநிறுத்த எச்சரிக்கை’யும் வெளியாகியுள்ளதால், வரும் நாட்களில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஈரானின் அடுத்த கட்ட இலக்கு என்ன? டொனால்ட் டிரம்பின் ரகசிய உச்சிமாநாடும் மத்திய கிழக்கு போர் அபாயமும்!”: மூத்த பத்திரிகையாளர் சோபியான் அலசல்!

MUST READ