spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு ஓட்டுக்கு ரூ.1,000 எனில் ஒரு தொகுதிக்கு ரூ.15 கோடி- விஜய் அதிரடி

ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 எனில் ஒரு தொகுதிக்கு ரூ.15 கோடி- விஜய் அதிரடி

-

- Advertisement -

ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 எனில் ஒரு தொகுதிக்கு ரூ.15 கோடி- விஜய் அதிரடி

நடிகர் விஜய்-ன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியர்களுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

Image

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் விஜய், “வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்கள். உங்களை பார்த்தால் என் பள்ளி கால ஞாபகம் வருகிறது. காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபாய் இருந்தா எடுத்துக்குவாங்க ஆனா படிப்பு இருந்தா மதிப்பாங்கங்குற படம் டயலாக் தான் இந்த நிகழ்வுக்கே காரணம். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்ன்னா, ஒரு தொகுதிக்கு 15 கோடின்னு வெச்சுக்கிட்டா, அதுக்கு முன்னாடி அவர் எவ்வளவு சம்பாதித்திருப்பார்? உங்க வீட்ல காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்கனு சொல்லுங்க. முயற்சி பண்ணுங்க. இது நடந்தால், உங்க கல்வி முறை முழுமை அடையும்.

we-r-hiring

நீங்க தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை தேர்வு செய்யப்போறீங்க. நம்ம விரலை வெச்சு, நம்மையே குத்தும் செயலை தான் இப்ப நாம செய்துட்டு இருக்கோம். காசு வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டு இருக்கோம். முழுமையான கல்வி பள்ளி, கல்லூரிக்கு செல்வது மட்டுமே ஆகாது. நாம் பள்ளிக்கு போய் படித்த பிறகு, அதை எல்லாம் மறந்த பிறகும், நம் மனதில் நிற்கும் சிந்திக்கும் திறன் மற்றும் character மற்றும் தான் முழுமையான கல்வி ஆகும், பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் யாரும் எந்த தவறான முடிவுகளை எடுக்காதீர்கள்.” என்றார்.

MUST READ