spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலி பேசாததால் காதலன் செய்த வெறிச்செயல்

காதலி பேசாததால் காதலன் செய்த வெறிச்செயல்

-

- Advertisement -

காதலி பேசாததால் காதலன் செய்த வெறிச்செயல்

காதலி பேசவில்லை என்பதற்காக பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவனால் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

student

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் 15 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன் திடீரென நாகர்கோவிலில் இருந்து கொல்லங்கோடு செல்லும் பேருந்தின் பின் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணாடி உடைந்து மாணவனின் கையில் பட்டு ரத்தம் கொட்டியது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

மாணவரிடம் போலீசார் விசாரணை செய்த போது காதலி பேசவில்லை என்ற கோபத்தில் கண்ணாடியை அடித்து உடைத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கோட்டாறு போலீசார் விசாரணை நடத்திய வருகிறார்கள்.

MUST READ