spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவைக்கம் சென்றார் முதல்வர் மு. க ஸ்டாலின்

வைக்கம் சென்றார் முதல்வர் மு. க ஸ்டாலின்

-

- Advertisement -

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரள அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு. க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

வைக்கம் சென்றார் முதல்வர் மு. க ஸ்டாலின்

கேரளா மாநிலத்தில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் களம் இறங்கி போராடினார். அந்த போராட்டத்தை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் கேரளா அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது.

we-r-hiring

அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கம் செல்கிறார்.

அப்போது வைக்கத்தில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜானகி எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

வைக்கம் சென்றார் முதல்வர் மு. க ஸ்டாலின்

இதற்காக வைக்கதிலுள்ள ஜானகி அம்மா வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள ஜானகி எம்.ஜி.ஆர் திருவுருவ சிலை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜானகி அம்மாவின் மருமகன் தீபன் கூறும் போது,

தமிழக முதல்வர் இன்று கேரளா அரசு சார்பில் நடைபெறும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்பொழுது ஜானகி அம்மையாரின் வீட்டிற்கு வருவதாகவும் இங்கு உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார். இது மகழ்ச்சியான தருணம் என்று தீபன் கூறினார்.

வைக்கம் சென்றார் முதல்வர் மு. க ஸ்டாலின்

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெறும் பந்தல் தயார் நிலையில் உள்ளது. காவல்துறையினர் தங்களுடைய முழு கட்டுப்பாட்டில் இந்த பகுதியை கொண்டு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரு மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் இந்த விழா பந்தலானது சுமார் 25 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.

MUST READ