Homeசெய்திகள்தமிழ்நாடுவணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்வு!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்வு!

-

- Advertisement -

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.61.50 அதிகரித்து, ரூ.1,964.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை, எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, இன்று நவம்பர் ஒன்றாம் தேதியை ஒட்டி எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளன. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளது.

we-r-hiring

வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை 171 ரூபாய் குறைப்பு

புதிய அறிவிப்பின் படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து, ரூ.1,964.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில்,  14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி, சிலிண்டர் ஒன்று ரூ.818.50 ஆக நீடிக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது வணிகர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

MUST READ