spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடிச.14- ல் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!

டிச.14- ல் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!

-

- Advertisement -

 

விஜயகாந்த்

we-r-hiring

வரும் டிசம்பர் 14- ஆம் தேதி தே.மு.தி.கவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

இது குறித்து தே.மு.தி.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற டிசம்பர் 14- ஆம் தேதி வியாழக்கிழமை காலை 08.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அதில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது!

இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள், மாவட்டச்செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய மாநில செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ