Homeசெய்திகள்தமிழ்நாடுபத்திரப்பதிவுத் துறையில் டிஜிட்டல் புரட்சி: நேரில் வராமலே இணையவழியில் கட்டாயப் பதிவு – முதலமைச்சர் விஜய்...

பத்திரப்பதிவுத் துறையில் டிஜிட்டல் புரட்சி: நேரில் வராமலே இணையவழியில் கட்டாயப் பதிவு – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தொடக்கம்!

-

- Advertisement -

தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் ஊழலை ஒழித்து, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வீடு மற்றும் நிலங்களைப் பதிவு செய்யும் வகையில், ‘வருகையில்லா இணையவழி ஆவணப்பதிவு’ (Presence-less Online Registration) திட்டத்தை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.பத்திரப்பதிவுத் துறையில் டிஜிட்டல் புரட்சி: நேரில் வராமலே இணையவழியில் கட்டாயப் பதிவு – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தொடக்கம்!

முதலீட்டாளர்கள் மற்றும் மனைய உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் நவீன நடைமுறையின் படி, முதன்மை மனை விற்பனை (First-time Plot Sale) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் வீடு விற்பனை (First-time Apartment Sale) ஆவணங்கள் இனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே, இணையவழியில் மட்டுமே கட்டாயமாகப் பதிவு செய்யப்படும். இதற்காகச் சிறப்பு மென்பொருள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் பத்திரப்பதிவுத் துறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

இணையவழிப் பதிவின் முக்கிய சிறப்பம்சங்கள்
நேரில் வரத் தேவையில்லை:
பொதுமக்கள் மற்றும் மனை வணிக மேம்பாட்டாளர்கள் (Promoters) சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

வெளிப்படைத்தன்மை உறுதி: தரகர்கள் தலையீடு மற்றும் லஞ்சக் கோரிக்கைகளை முற்றிலும் தடுக்கும் வகையில் கட்டாய டிஜிட்டல் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேர விரயம் தவிர்ப்பு: ஆவணங்களைச் சரிபார்ப்பது முதல் பதிவுக் கட்டணம் செலுத்துவது வரை அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே அதிவிரைவாகச் செயல்படுத்தப்படும்.

நிர்வாகச் சீர்திருத்தத்தில் புதிய மைல்கல்
இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் சேவையை எளிமையாக்குவதே நமது அரசின் முதன்மை இலக்கு. பொதுமக்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தி, பத்திரப்பதிவுத் துறையில் நூறு சதவீத வெளிப்படைத்தன்மையை இந்த வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை உறுதி செய்யும்” எனத் தெரிவித்தார்.

அரசுத் துறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடி டிஜிட்டல் மாற்றம், பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“தொழில்துறையைச் சீரழித்த பெருமை தவெக அரசையே சாரும்!” – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சனம்!

MUST READ