Homeசெய்திகள்தமிழ்நாடுமார்ச் 1 அன்று முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மார்ச் 1 அன்று முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Image

we-r-hiring

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தலைவர்கள்பங்கேற்கவுள்ளனர்.

விழாவில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருப்பதாகவும், இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போவதாக அமைவதாகவும் அறிக்கையில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ