spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

-

- Advertisement -

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டார். 

Ramachandra

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவ சிகிச்சைக்குப்பின் நலமுடனும் இருக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன் தெரிவித்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ நிபுணர்கள் அவரது உடல்நலம் நன்றாக இருக்கிறது என்றும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

we-r-hiring

இதுதொடர்பாக முன்னாள் மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று பகல் 11.00 மணி அளவில் அமெட் பல்கலைக்கழக வேந்தரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான டாக்டர் நாசே ஜே.இராமச்சந்திரன் மருத்துவமனையில் ஈவிகேஎஸ்.இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது உடல் நலம் சம்மந்தமாக நேரிலும், தொலைபேசி மூலமும் மிகுந்த அக்கறையோடும், ஆர்வமுடனும் கேட்கும் காங்கிரஸ் பேரியக்க சகோதர, சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பூரண நலத்துடன், தன்மானத்தலைவராக, அவருக்கே உரிய பாணியில் விரைவில் மக்களை சந்திப்பார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ