ஜி ஸ்கொயரின் பத்திரப்பதிவுகள் ஆய்வு
கடந்த 3 ஆண்டுகளாக ஜி ஸ்கொயர் நிறுவனம் மூலமாக நடந்த பத்திரப்பதிவுகளி வருமான வரித்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான என பாஜக குற்றம்சாட்டியது. இதையடுத்து ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ, அவர்கள் கட்டுப்பாட்டிலோ இல்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக ஜி ஸ்கொயர் நிறுவனம் மூலமாக நடந்த பத்திரப்பதிவுகளி வருமான வரித்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். நிலங்களின் மதிப்பை குறைத்துக்காட்டி பத்திரப்பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம் 2 ஆண்டுகளாக பெருமளவு லாபம் ஈட்டிவருவதாக எழுந்த புகாரின்பேரில், வருமான வரித்துறையினர் 2 ஆவது நாளாக ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.