Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

நேற்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், இதேபோல் ஒரு சவரன் ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை தொடர்ந்து ரூ.70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90.70-க்கும், கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 90,700 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், இதேபோல் ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/gold-price-down-by-rs-280-per-sovereign/84367

வெள்ளி விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30 காசுகள் உயர்ந்து ரூ.91-க்கும், ஒரு கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ