spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் வாங்க சரியான நேரம்....தொடர்ந்து குறையும் தங்கம் விலை...

தங்கம் வாங்க சரியான நேரம்….தொடர்ந்து குறையும் தங்கம் விலை…

-

- Advertisement -

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்றும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

we-r-hiring

சென்னையில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதேபோல் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் கடந்த திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.46,800க்கு விற்பனையானது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,480க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.40க்கு விற்பனையானது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாயும், கிராமுக்கு 30 ரூபாயும் குறைந்துள்ளது. சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 46,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் .5,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 77 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

MUST READ