
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.47,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ரூ.47,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் 80 பைசாக்கள் உயர்ந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்று கிழமையான நேற்று விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.47,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ. 5,930 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.77,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


