spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - மீண்டும் ஒரு சவரன் ரூ.49,000ஐ தாண்டியது

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை – மீண்டும் ஒரு சவரன் ரூ.49,000ஐ தாண்டியது

-

- Advertisement -

தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.48,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று ஆபரண தங்கம் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,090-க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.48,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. மீண்டும் ஒரு சவரன் தங்கம் விலை 49 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,135-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் கிலோ வெள்ளி 300 ரூபாய் உயர்ந்து ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை மீண்டும் 49 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ