Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன் - ஆளுநர் ரவி

நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன் – ஆளுநர் ரவி

-

நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன் – ஆளுநர் ரவி

நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஆளுநர் தனது பதவியை ராஜினாமா

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடனான ‘எண்ணித் துணிக’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நீட் தேர்வில் இருந்து ஒருபோதும் விலக்கு அளிக்க முடியாது. நீட் தேர்வு தேவை என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருப்பேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும். ஆகவே நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன். திறமையான மாணவர்களை கொண்டுவரவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. பயிற்சி மையம் இருந்தால்தான் நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற முடியும் என்ற போலி பிம்பத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளனர்.

நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும்போதே நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்யலாம்” என்றார்.

MUST READ