Homeசெய்திகள்தமிழ்நாடு"அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக"- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

ttv dhinakaranஊதிய உயர்வு தரக்கோரி போராடும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகத்துடன் ஆவின் பால் பாக்கெட்கள்

இது குறித்து டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவப் பணியில் சேர்ந்த 14 ஆண்டுகளில் மத்திய அரசு மருத்துவர்களைவிட மாநில அரசு மருத்துவர்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைவான ஊதியம் பெறுவதாக அரசு மருத்துவர்களுக்கான போராட்டக் குழுவினர் கூறுகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது முதலமைச்சரான பின் பலமுறை மனு அளித்தும் தங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என அரசு மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது- ராமதாஸ் கண்டனம்!

கொரோனா பரவல் காலத்தில் பொது சுகாதாரத்துறையின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசுக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளான மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ