Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறதாகவும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இன்று தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Rain

அக்.20-ல் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  அக்.21-ல் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது. மேலும்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ