Homeசெய்திகள்தமிழ்நாடு"மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

“மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

-

- Advertisement -

 

"மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
Photo : Minister Udhay

தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.

we-r-hiring

தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க உத்தரவு!

ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?

அக்.1- ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

எய்ம்ஸ் கட்டுமானப் பணியைத் தாமதப்படுத்தி தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ