- Advertisement -
கே.பி. அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.45 கோடி சொத்து குவிப்பு
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
கே.பி. அன்பழகன் ரூ.11.32 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், 58 இடங்களில் நடந்த சோதனை, விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ரூ.45 கோடி சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே.பி. அன்பழகன் தனது உறவினர்களான ரவிசங்கர், சரவணன், சரவணகுமார் உள்ளிட்டோர் பெயரிலும் சொத்து வாங்கி குவித்துள்ளார். மேலும் தனது நெருங்கிய கூட்டாளிகளான மாணிக்கம், மல்லிகா, தனபால் பெயரிலும் கே.பி. அன்பழகன் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
கே.பி. அன்பழகன், அவரது உறவினர்கள் உள்ளிட்ட 10 பேர் மீதும் சரஸ்வதி 10 பேர் மீதும் சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.