தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும், அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.


புதுச்சேரியில் 3 லட்சத்து 50 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகளும், 56 ஆயிரத்து 500 வர்த்தக பயன்பாடு இணைப்புகளும் உள்ளன. இதுதவிர ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் இணைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசு சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள உத்தரவில், “அரசின் அனைத்து சலுகைகள், சேவைகள் பெற ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அரசின் அனைத்து சேவைகளையும் பெற எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் உள்ளது. இதன் மூலம் பயனாளிகள் தங்கள் உரிமைகளை நேரடியாக பெற முடிகிறது.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இத்துடன் வங்கி அல்லது தபால் வங்கி புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, உழவர் அட்டை, ஓட்டுனர் உரிமம், அரசிதழ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பதற்கான இணையதளம் முகவரி மற்றும் காலக்கெடு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 3 லட்சத்து 50 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகளும், 56 ஆயிரத்து 500 வர்த்தக பயன்பாடு இணைப்புகளும் உள்ளன. இதுதவிர ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் இணைப்புகள் உள்ளன
