spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை! 

நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை! 

-

- Advertisement -

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை வினாடிக்கு 17,586 கனஅடி நீர் வரத்தான நிலையில், இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 29,850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

we-r-hiring
mettur dam
mettur dam

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 100.01 அடியாக உள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 29,850 கனஅடி நீர் வரத்தாகும் நிலையில், அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,500 கனஅடி நீரும், கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடி நீரும் என மொத்தமாக 8,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

MUST READ