spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றம்- அமைச்சர் மா.சு.

கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றம்- அமைச்சர் மா.சு.

-

- Advertisement -

கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றம்- அமைச்சர் மா.சு.

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்ட உள்ள கலைஞர் கருணாநிதி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதிக்கு பதிலாக மாற்று தேதியில் இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

masu

புதுக்கோட்டை பேராங்குளம் அருகே தனியார் நிறுவனத்தை திறந்து வைக்க வருகை தந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை கிண்டியில் அமைக்கப்பட்ட உள்ள கலைஞர் கருணாநிதி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதிக்கு பதிலாக மாற்று தேதியில் இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார்.

we-r-hiring

ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவித்துள்ளார். ஒன்றாம் தேதி ஆறாம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கும், தொடக்கப்பள்ளி ஐந்தாம் தேதியும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக வெயிலின் தாக்கம் குறையும் என நம்புகிறோம். முதலமைச்சரின் சிங்கப்பூர் பயணம் குறித்து தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள் வைக்கும் விமர்சனத்திற்கு நான் பதில் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

MUST READ