Homeசெய்திகள்தமிழ்நாடுமுருகனுக்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும் தான்! சர்ச்சையான 2 மனைவி பிரச்சனை

முருகனுக்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும் தான்! சர்ச்சையான 2 மனைவி பிரச்சனை

-

- Advertisement -

முருகனுக்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும் தான்! சர்ச்சையான 2 மனைவி பிரச்சனை

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலை சர்வதேச சிறுதானிய கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழ்கடவுள் சர்க்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காக திணை சாப்பிட்டார். 2 திருமணம் செய்துகொண்டார். 2 திருமணமா? மூன்றா? நக்கலாக பேசிவிட்டு பின்னர் ஜோவியலாக பேசினேன் என விளக்கம் அளித்தார்.

MRK

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “”கடவுள் முருகர் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முருகன் இரண்டா அ‌ல்லது மூன்றா? ஆமாம் சாமி… இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தினை மாவு சாப்பிட்டார் ” என்று கூறி விட்டு “ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன்” எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

we-r-hiring

உவமான, உவமேயங்களுக்கு ஆன்மீக எதிர்ப்பாளர்கள் ஏன் கடவுள்களை குறிப்பிட வேண்டும்? ஏன் க‌ட‌ந்த காலத்தை குறிப்பிட வேண்டும்? நிகழ் காலத்தில் இல்லாத சான்றுகளா? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா? சாதாரணமாக, கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களையே குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே? தினை மாவை எங்கே வாங்கினார் என்பதையும் சேர்த்து சொல்லுங்களேன்!” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ