பங்குனி உத்திரம்: குலதெய்வ கோயிலில் விக்னேஷ்- நயன் வழிபாடு
பாபநாசம் அருகே வழுத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வழிபாடு செய்தனர்.
இயக்குனர் சந்தோஷ் சிவனை திருமணம் செய்த நடிகை நயன்தாராவிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோ நீல் என்.சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக தெய்விக் என்.சிவன் என்றும் பெயர் குட்டியுள்ளனர்.
இந்நிலையில் தனது குலதெய்வ கோவிலான பாபநாசம் அருகில் உள்ள வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இன்று இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் அம்மனை வழிபட்டனர். நயன்தாரா கோவிலுக்கு வந்த தகவல் பரவியதும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் குவிந்தனர்.
குலதெய்வ கோவிலில் உள்ள அனைத்து கிராம தேவதைகளுக்கும் பொங்கல், பழங்கள் வைத்து நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வழிபாடு நடத்தினர்.இவர்களது திருமணம் நிச்சயக்கப்பட்டதும் இருவரும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.