Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு வழக்கு – அகல் விளக்கு பதிப்பக...

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு வழக்கு – அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

-

- Advertisement -

கோவை பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு வழக்கு – அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு வழக்கு – அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

மோகன் கைது செய்யப்பட்ட உடனேயே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், அவரிடம் விசாரணை நடத்துவதற்குப் போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தனது மனுவில் தெரிவித்துள்ளது. எனவே, அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

இந்த மனு மீதான நீதிமன்ற விசாரணையில் காவல் விசாரணைக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூலகப் புத்தகங்கள் கொள்முதலில் 3 ஆண்டுகளாக முறைகேடு? உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

MUST READ