Homeசெய்திகள்தமிழ்நாடுவிபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45). கடந்த ஜூலை மாதம் 30- ஆம் தேதி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நிலவின் தென்துருவத்தில் சராசரி வெப்பநிலை- இஸ்ரோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

அதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய்க்கான நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் வழியில் இன்று (ஆகஸ்ட் 27) திருச்சி விமான நிலையத்தில், ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

இந்த நிகழ்வின் போது, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இ.ஆ.ப., திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இ.கா.ப. ஆகியோர் உடனிருந்தனர்.

MUST READ