spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநிலவின் தென்துருவத்தில் சராசரி வெப்பநிலை- இஸ்ரோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

நிலவின் தென்துருவத்தில் சராசரி வெப்பநிலை- இஸ்ரோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

-

- Advertisement -

 

"நிலவில் வலம் வரத் தொடங்கியது ரோவர்"- இஸ்ரோ அறிவிப்பு!
Photo: ISRO

நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கி மேற்பரப்பை ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் தனது ஆய்வுகளை விக்ரம் லேண்டர் மூலம் அனுப்பிய தகவல்களை வெளியிட்டது இஸ்ரோ.

we-r-hiring

சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை ஆய்வு செய்த பிரக்யான் ரோவர், ஆய்வு தகவலை லேண்டர் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளது. பிரக்யான் ரோவரில் உள்ள ChaSTE என்ற ஆய்வுக் கருவி நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை ஆய்வு செய்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் 10 அடி ஆழம் வரையிலான வெப்பநிலை குறித்து ஆய்வுச் செய்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் சராசரி வெப்பநிலை- இஸ்ரோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
Photo: ISRO

நிலவின் மேற்பரப்பில் ஊடுருவி பல்வேறு கட்டங்களில் ஆய்வுச் செய்த வெப்பநிலை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெப்பநிலை பரிசோதனைக் கருவியில் உள்ள 10 சென்சார் மூலம் வெப்பநிலைப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இஸ்ரோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் பல்வேறு ஆழங்களில் நிலவின் வெப்பநிலை மாறுபாடு தெரிய வந்துள்ளது. நிலவின் தென்துருவத்தின் சராசரி வெப்பநிலை பதிவுச் செய்யப்படுவது இதுவே முதல்முறை. வெப்பநிலை ஆய்வு கருவியை பெங்களூரு மற்றும் அகமதாபாத் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ